யாழில்.பாணின் விலையில் மாற்றமில்லை!
யாழ்ப்பாண மாவட்டத்தில் பாணின் விற்பனை விலையில் மாற்றம் ஏற்படாது என யாழ் மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்க தலைவர் க.குணரட்ணம் தெரிவித்துள்ளார்.

450 கிராம் பாண் ஒன்றின் விலை பத்து ரூபாவினால் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் பாண் விற்பனை விலை தொடர்பாக கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் பாணின் விற்பனை விலை 250 ரூபா வரை விற்கப்படுகிறது. அதனால் அவர்கள் பத்து ரூபாய் குறைத்து தற்போது விற்பனை செய்வதாக அறிவித்துள்ளனர். 

ஆனால் நாங்கள் யாழ் மாவட்டத்தில் ஏற்கனவே பாணை 200 ரூபாய்க்கு விற்கும் போது அதிலிருந்து பத்து ரூபாய் குறைப்பது என்பது முடியாத காரியம் ஆகும். ஆகவே இதனை பொதுமக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.

No comments