8 கட்சிகளுடன் பேச்சுவார்த்தை!உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மூலம் நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இத்தருணத்தில் அரசியல் தேவைக்காக வாக்கு கேட்கப்படுகிறதே தவிர தேர்தலின் தேவைக்காக அல்ல. நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென தெரிவித்த அமைச்சர், எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

புதிய கூட்டணியுடன் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், அதற்காக ஏற்கனவே 8 கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் சின்னம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“..கொரோனா தொற்றுநோய் காரணமாக, உள்ளூராட்சி தேர்தலை அரசாங்கம் ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்க வேண்டியிருந்தது. தேர்தல் தள்ளிப்போகும் என்று நாங்கள் யாரும் கூறவில்லை. ஆனால், எதிர்க்கட்சிகள் அப்படியொரு சித்தாந்தத்தை நாட்டில் கட்டியெழுப்ப முயற்சிக்கின்றன.

No comments