கொழும்பில் துப்பாக்கி சூடு - வர்த்தகர் உயிரிழப்பு


கொழும்பு – ஹங்வெல்ல பிரதேசத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஹங்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய  உணவகம் ஒன்றின் உரிமையாளரே  உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த நபர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது உணவகத்தில் இருந்த வேளை திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து அவர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No comments