வவுனியாவில் 10க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழப்பு ; குடிநீரில் விஷம் கலந்து இருக்கலாம் என சந்தேகம்


வவுனியா பூம்புகார் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மர்மமான முறையில் 10க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்து காணப்பட்டன. 

விவசாய நிலத்தினுள் கட்டாக்காலி மாடுகள் உட்புகுந்து, பயிர்களை சேதம் விளைவித்து வருவதை தடுக்க நினைத்த நபர்கள், யூரியா மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளை மாடுகள் அருந்திய நீரில் கலந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இன்னும் சில மாடுகள் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும், இந்தச் சம்பவம் தொடர்பில் மாடுகளின் உரிமையாளர்களால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

No comments