மன்னாரிலிருந்து தமிழகம் செல்ல முற்பட்டவர்கள் விளக்கமறியலில்!


சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தமிழகம் செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  ஐந்து பேரை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

பேசாலை , வவுனியா மற்றும் திருகோணமலையை சேர்ந்த 3 ஆண்களும், பெண்ணொருவரும் மற்றும் சிறுமி ஒருவர் உள்ளடங்கிய குழு ஒன்று படகு மூலம் தமிழகம் செல்ல முற்பட்ட வேளை கடற்படையினர் கைது செய்து, தலை மன்னார் பொலிசாரிடம் ஒப்படைத்தனர். 

கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் தலைமன்னார் பொலிஸார் மன்னார் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை 16 வயதான சிறுமியை,  சிறுவர் நன்னடத்தை பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் ஏனைய நால்வரையும் எதிர்வ்ரும் 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்

No comments