நாவலரின் நினைவாக சமூக செயற்பாட்டாளர்களுக்கு நாவலர் விருது


ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவதரித்து 200 ஆண்டு நிறைவு மாநாடு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை, யாழ்.மாநகரசபை சமய விவகாரக் குழு ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வந்த நிலையில், யாழ்ப்பாணம் நல்லூர் துர்க்கா தேவி மணி மண்டபத்தில்  நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இறுதிநாள் நிகழ்வுகள் இடம்பெற்றன. 

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் மணிமண்டபத்திலே ஆன்மிக அரங்கின் தொடக்க நிகழ்வுகள் கடந்த புதன்கிழமை குருபூஜை நிகழ்வுகளோடு ஆரம்பமாகி நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன.  

குறித்த நிகழ்வில் நாவலர் பெருமானின் நினைவாக சமூக செயற்பாட்டாளர்களுக்கு நாவலர் விருதும் வழங்கி வைக்கப்பட்டது

இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதியின் இந்து சமய விவகாரங்களுக்கான இணைப்பாளர் கலாநிதி ராமச்சந்திரன் பாபு சர்மா குருக்கள், நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள், சர்வதேச இந்துக் குருமார் ஒன்றியத் தலைவர்  து.கு.ஜெகதீஸ்வரக் குருக்கள், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ய.அநிருத்தனன்,, செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன், சமயப் பெரியார்கள், கல்விமான்கள், அறநெறிப் பாடசாலைச் சமூகத்தினர், பல்கலைக்கழக சமூகத்தினர் எனப் பலரும் பங்கெடுத்திருந்தனர்.







No comments