கழிவுகளை வீசிவருகின்றனர் விஷமிகள்

யாழ்ப்பாணம் சோமசுந்தரம் வீதியையும், கோவில் வீதியையும் இணைக்கும் கோவில் ஒழுங்கை பகுதிகளில் விஷமிகள் கழிவுகளை வீசி வருவதனால்

அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

தற்போது மழை காலம் ஆரம்பித்ததுள்ள நிலையில், குறித்த ஒழுங்கை பகுதியில் வெள்ளநீர் தேங்கி நிற்பதனால் . ஒழுங்கைக்குள் வசிப்பவர்கள் போக்குவரத்து உள்ளிட்ட விடயங்களில் பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது விஷமிகள் அந்த ஒழுங்கைக்குள் கழிவுகளை கொட்டுவதனால் க்ஷ, பலத்த இன்னல்களை அப்பகுதிகளில் வசிப்போர் எதிர்நோக்கியுள்ளனர்.

வீசப்படும் கழிவுகள் மழை வெள்ளத்தில் மிதந்து வீட்டு வளவுக்குள் வருவதனாலும், வீதிகளில் வெள்ளநீருடன் கழிவுகள் சிதறி காணப்படுவதானலும் இன்னல்களை எதிர்நோக்குகின்றதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

செய்தி: பு.கஜிந்தன்

No comments