கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் ஜெல்ஸின் நினைவேந்தல்
கடந்த 2008.11.01 அன்று இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட, யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் செல்லத்துரை புருசோத்தமனின் 14வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம் 12 மணியளவில் யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள், புருஷோத்தமனின் திருவுருவப் படத்திற்கு முன்னால் ஈகைச்சுடர் சுடர் ஏற்றி மலரஞ்சலி தூவி இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் சி.ஜெல்ஸினால் நினைவுரையும் ஆற்றப்பட்டது.
அன்னார் சமூகவியற் துறையில் 2ம் நிலையில் தேர்ச்சி பெற்று , ஆளைமையுள்ள பட்டதாரியாக வெளியேறி குறுகிய காலப்பகுதியில் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்தி:பு.கஜிந்தன்
Post a Comment