அணு ஆயுதப் போர் ஏற்பட்டால் யாருக்கும் வெற்றி கிடையாது - புடின்


அணு ஆயுதப் போர் ஏற்பட்டால் யாருக்கும் வெற்றி கிடைக்காது என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

அணு ஆயுதப்போர் எப்போதும் நிகழக்கூடாது என்றும், உக்ரைன் விவகாரத்தில் மேற்கத்திய நாடுகள் அணு ஆயுதப் போரைத் தூண்டி விட வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அணு ஆயுத மோதலை தவிர்க்கவே ரஷ்யா விரும்புவதாகவும் புதின் தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் அணு உலைகள் பாதுகாப்பு குறித்து சர்வதேச அணுசக்தி கழகம் கவலை வெளியிட்டுள்ள நிலையில், இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் ரஷ்யாவின் அணு ஆயுத நிலைப்பாடு மற்றும் கொள்கை குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

No comments