சிறீகாந்தாவிற்கு சந்தேகம்!யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையையும் கடத்தலையும் தடுக்கும் நோக்குடன் பிரதான வீதிகளில் இராணுவ சோதனைச் சாவடிகள் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை அளிப்பதாக தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி ந.சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மாவீரர் நினைவஞ்சலி வாரம் நெருங்கி வரும் சூழ்நிலையில், போதைப் பொருள் தடுப்பு என்ற பெயரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை நீறுபூத்த நெருப்பாக நீடிக்கும் தமிழ் மக்களின் நீண்டகால துயர நினைவுகளை உரசிப்பார்க்கும் ஓர் உளவியல் துன்புறுத்தலாக மட்டுமே அமைய முடியும்.

“ பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அன்றாட வாழ்கைக்கே அல்லாடிக் கொண்டிருக்கும் பொதுமக்கள் அனுபவிக்கும் துன்பதுயரங்கள் போதாது என்ற ரீதியிலா சோதனை சாவடி நடவடிக்கை என்றே கேட்கத் தோன்றுகின்றது.

யாழ்ப்பாணம் உட்பட தமிழ்ப் பிரதேசங்களில் இராணுவச் சோதனைச் சாவடிகள் என்பவை அநாவசியமான கெடுபிடிகளை ஏற்படுத்தியிருப்பது உளவியல் ரீதியாக அச்சுறுத்தி நிற்குமாறான வெறுப்புக்குரிய ஓர் பொறிமுறையாகவே கடந்த காலத்தில் இருந்து வந்துள்ளன என்பதே அனுபவபூர்வமான உண்மையாகும்.

இத்தகைய பின்னணியில் வடக்கின் ஆளுநர் இராணுவ சோதனைச் சாவடிகளை ஏன் பரிந்துரைத்துள்ளார் என்பது புதிராக உள்ளது.

மிகவும் ஆட்சேபகரமான விடயமாக படைத்தரப்பினரால் தொடர்ந்து அணுகப்பட்டு வந்திருக்கும் மாவீரர் நினைவஞ்சலி வாரம் நெருங்கி வரும் சூழ்நிலையில், போதைப் பொருள் தடுப்பு என்ற பெயரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை நீறுபூத்த நெருப்பாக நீடிக்கும் தமிழ் மக்களின் நீண்டகால துயர நினைவுகளை உரசிப்பார்க்கும் ஓர் உளவியல் துன்புறுத்தலாக மட்டுமே அமைய முடியும் .

கடலிலே கடற்படையிடம் போதைவஸ்து மீன்கள் சிக்குவது போல தரையில் நிகழப் போவதில்லை. இந்தச் சூழ்நிலையில் அர்த்தமற்ற இந்த திட்டத்தை கைவிடுமாறு வடமாகாண ஆளுநரை நாம் கோருகின்றோம்.


அதிகாரம் மிக்க பலரின் ஆதரவோடும் அனுசரணையோடும் தான் யாழ்ப்பாணப் பிராந்தியத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கௌரவத்தோடு வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதே அந்த உண்மை.

அது மட்டுமன்றி இவர்களின் தென்னிலங்கை தொடர்புகள் ஊடாகவே யாழ்ப்பாணம் இன்று மெல்ல மெல்ல நாசமாகிக் கொண்டிருக்கின்றதெனவும் சிறீகாந்தா தெரிவித்துள்ளாh


No comments