கஞ்சா:பிக்குவும் கதைக்கிறார்!

 


வடக்கினை போதைபொருள் மையமாக காண்பிப்பதில் இலங்கை புலனாய்வு கட்டமைப்புக்கள் காண்பித்துவருகின்ற முனைப்பு சந்தேகத்தை தோற்றுவித்துவருகின்றது.

இந்நிலையில் மீனவர்கள் போதை பொருள் கடத்தலில் ஈடுபடக்கூடாது அவ்வாறு ஈடுபடுவோர் தொடர்பில் தகவல் கிடைத்தால் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என யாழ்ப்பாணம் ஆரிய குளம் நாகவிகாரையின் விகாராதிபதி கருத்து வெளியிட்டுள்ளார்.

வடபகுதியில் போதை பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது. ஆனால் அத்தகைய போதை பொருள் இந்தியாவில் இருந்து இங்கு கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது,

எனவே கடற்தொழிலுக்கு செல்லும் மீனவர்கள் தமது படகுகளில் ஏதாவது போதை பொருள் கடத்தப்படுவது தொடர்பில் தகவல் இருந்தால் அதனை தடுத்து நிறுத்த வேண்டும்

அத்தோடு மீனவர்களள் யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள்  கடத்தலுக்கு துணை போகக்கூடாது எனவும் நாகவிகாரையின் விகாராதிபதி கருத்து வெளியிட்டுள்ளார்.

இதனிடையே யாழ்ப்பாணத்தில் போதைபொருள் கடத்தலை தடுக்க இராணுவம் களமிறங்கவுள்ளதாக யாழ்.மாவட்ட இராணுவ தளபதி நேற்றைய தினம் அறிவித்திருந்த நிலையில் இராணுவத்தினரால் இன்று நடாத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கேரள கஞ்சா போதைப் பொருள் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு தரப்பு அறிவித்துள்ளது.


No comments