ரகுபதி சர்மாவும் வெளியே வந்தார்!


 

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மீதான குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 22 வருடங்கள் புதிய மகசின் சிறைச்சாலையில் சிறைவாசம் அனுபவித்துவந்த இந்துமதகுரு இன்று விடுதலையானர்.

அண்மையில் இலங்கை ஜனாதிபதியால் பெர்துமன்னிப்பு வழங்கப்பட்ட எண்மருள் ஒருவரான சந்திரா ரகுபதி சர்மாவே இன்று வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2000ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 22 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த அவருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி 300 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கைதாகியிருந்த நிலையில் அன்றைய தினம் அவரது மனைவி சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுதலை செய்யப்படடிருந்தார்.

எனினும் 2015ஆம் ஆண்டு மேன்முறையீடு செய்ததன் மூலம் 13 வருடங்கள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்று வந்திருந்தது. 

No comments