மொட்டை கடதாசி காவல்துறை?தமிழீழ மாவீரர் தின ஏற்பாடுகள் வடகிழக்கெங்கும் முனைப்புப்பெற்றுள்ள நிலையில் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி உள்ளிட்ட பலர், காரணம் தெரிவிக்கப்படாத நிலையில், விசாரணைக்கு இன்று அழைக்கப்பட்டுள்ளனர்.

இன்று முல்லைத்தீவு காவல் நிலையத்தில், காவல்துறை பொறுப்பதிகாரியை சந்திக்குமாறு, வெறும் கடதாசியில் எந்தவித அடையாளப்படுத்தலும் இல்லாத வகையில், அழைப்பு விடுக்கப்பட்டது.

காவல்துறை கட்டளையோ அல்லது பதவி முத்திரையோ இன்றி, சிறிய வெள்ளை தாளில், அழைப்பு கட்டளை எழுதப்பட்ட நிலையில், காவல்துறையினர்;, இன்று பகல், உரிய நபர்களது வீடுகளுக்கு சென்று வழங்கியுள்ளனர்.

ஏற்கனவே வடகிழக்கில் பரவலாக இலங்கை படைகள் துயிலுமில்ல சிரமதானத்தில் ஈடுபடும் செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தியே வருகின்றது.


No comments