செய்தியாளர் செல்வராசா ரமேஸ் காலமானார்!



 யாழ்ப்பாணத்தின் ஆளுமைமிக்க பிராந்திய செய்தியாளர்களுள் ஒருவரான செல்வராசா ரமேஸ் மாரடைப்பினால் காலமானார். 

ஈழநாதம் பத்திரிகை 1990களின் பின்னராக வெளிவந்த காலம் முதல் யாழில் ஊடகப்பணியாற்றிய ரமேஸ் வட இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளராகவும் இருந்திருந்தார்.

யாழ். தினக்குரல் பத்திரிகை உள்ளிட்ட பல ஊடகங்களில அவர் தனது பணியினை ஆற்றியிருந்தார்.

சந்திரிகாவின் நவாலி தேவாலய படுகொலை சாட்சியமான ரமேஸ் கிராமசேவையாளரான தனது சகோதரியையும் விமானக்குண்டுவீச்சில் இழந்திருந்தார்.

சகோதரி நினைவாக நவாலி படுகொலை நினைவுதூபியை நிறுவியுள்ளதுடன் வருடந்தோறும் நினைவேந்தல்களை முன்னின்று நடாத்திவருவது குறிப்பிடத்தக்கது.


No comments