புதிய கூட்டு விரைவில் அறிவிப்பு!இலங்கை தமிழரசுக்கட்சி தவிர்ந்த தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி செயற்படும் ஆறு கட்சிகளது கூட்டு முயற்சி வெற்றியை அண்மித்துள்ளதாக சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

எதிர்வருங்காலங்களில் தமிழ் கட்சிகள் தனித்து எதனையும் செய்யமுடியாதென்ற நிலையில் கருத்தொருமைப்பாட்டிற்கு வந்திருப்பதாக தெரியவருகின்றது.

இதனிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தின் அமர்வுகளில் இருந்து 3 மாத காலத்துக்கு விடுமுறையை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

89 வயதான இரா.சம்பந்தனின் உடல் நிலை அண்மைக்காலமாக சீராக இல்லாத நிலையில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இரா.சம்பந்தனின் கோரிக்கையின் அடிப்படையில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல நேற்று விண்ணப்பத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவிடம் சமர்ப்பித்ததையடுத்து, அவருக்குரிய விடுமுறை கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


No comments