சாள்ஸ் மீது முட்டை வீச்சு


இங்கிலாந்தின் வடக்கு மாநகரில் சென்ற மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி ராணி கமிலா ஆகியோர் மீது முட்டை வீச முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.  

மன்னரும் அவரது மனைவியும் மிக்லேகேட் பார் வழியாக யார்க்கிற்குள் நுழையும்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.  

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  அந்த வீடியோவில் அரசர் வருவதற்கு முன்பாக இருபுறமும் பொதுமக்கள் காத்திருந்த போது முட்டைகள் பறந்து வந்து விழுவது தெரிகிறது.  

அரச குடும்பத்தினர் மீது வீசப்பட்ட முட்டை படவில்லை.  இதையடுத்து முட்டைகளை வீசிய நபரை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

அப்போது அந்த நபர் "இந்த நாட்டு அடிமைகளின் இரத்தத்தால் கட்டப்பட்டது" என்று கூச்சலிட்டார்.No comments