எரிந்து தரையில் வீழ்ந்தது மசூதியின் குவிமாடம்


இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் அமைந்திருந்த மசூதியில் ஏற்பட்ட தீவிபத்தில் மிகப்பெரும் குவிமாடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

ஜகார்த்தாவில் உள்ள இஸ்லாமிய மையத்தின் பெரிய மசூதியை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், மசூதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

மேலும், அந்த வளாகத்தில் இருந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன கட்டடங்களிலும் தீ பரவியது.

தீயில் எரிந்துகொண்டிருந்த மசூதியின் குவிமாடம் சரிந்துவிழும் காட்சி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. மேலும், இந்த தீ விபத்தால் அந்தப் பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சியளிக்கிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.No comments