த.தே.ம.முன்னணியால் போதைப்பொருள் விழிப்புணர்வு நடவடிக்கை

கல்விக்கரம் உதவிமையத்தின் அனுசரணையுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களின் ஒத்துழைப்பில், தாயகமெங்கும் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் பாவனைக்கெதிரான தொடர் விழிப்புணர்வு பிரச்சாரம் நேற்று யாழ். கொட்டடி - பண்ணை பகுதியில் இடம்பெற்றது.

இன்றைய விழிப்புணர்வு நிகழ்வில் கல்விக்கரம் உதவி மைய நிறுவனர் கருணாகரனும், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித்தலைவியும் நல்லூர் பிரதேச சபை உறுப்பினருமாகிய திருமதி வாசுகி சுதாகரும், வலி. தென்மேற்கு பிரதேசசபை உறுப்பினர்கள் ஆகிய ராஜினி சௌந்தரநாயகமும்  சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் நிரஞ்சன் கலைவாணியும் யாழ். மாவட்ட ஊடக பொறுப்பாளர் சதீசும் பங்கு பற்றியிருந்தார்கள்.

No comments