பிளவு இல்லை:மனோ!


 

தமிழ் முற்போக்குக் கூட்டணியில் பிளவு எனும் செய்தியை மனோகணேசன் மறுதலித்துள்ளார்.   

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பொதுச்செயலாளர் சந்திரா சாப்டர், வயது மூப்பின் காரணமாக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சுயமாக விலகியுள்ளார் என்று, கூட்டணி தலைவரும் எம்.பியுமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நிலைபேறு மற்றும் வளர்ச்சிக்கு கணிசமாக பங்களித்துள்ள சாப்டரின் இடை விலகலை நாம் கனத்த இதயத்துடன் புரிந்துக்கொள்கின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டணியின் அரசியல் குழு விரைவில் கூடி, கூட்டணி  யாப்புக்கு இணங்க, புதிய பொதுச் செயலாளரை தெரிவு செய்யும் என்று கூட்டணியின் தலைவர் மேலும் கூறியுள்ளார்.

No comments