தப்பித்த கடற்படையினர் சர்வதேச கடலிலாம்!இலங்கையிலிருந்து தப்பித்ததாக சொல்லப்பட்ட கடற்படையினர் அறுவரது படகு கண்டறியப்பட்டுள்ளது.

ஆறு கடற்படை வீரர்களுடன், செப்டெம்பர் 17ஆம் திகதி முதல் காணாமல் போன கடற்படைக் கப்பலுடன் மீண்டும்  தொடர்பை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

தெற்கு கடற்படை கட்டளை பிரிவின் சிரேஷ்ட அதிகாரி மற்றும் 5 மாலுமிகள் அடங்கிய கடற்படைக் குழுவுடனான தொடர்பு, கடந்த செப்டெம்பர் 17ஆம் திகதி துண்டிக்கப்பட்டது.

தங்காலை கடற்கரையில் வழக்கமான ரோந்து பணிக்காக செப்டெம்பர் 16ஆம் திகதி குறித்த கப்பல் அனுப்பப்பட்டிருருந்தது.

அடுத்த நாள்முதல் கப்பலுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டதையடுத்து தேடுதல் நடவடிக்களை ஆரம்பித்த இலங்கை கடற்படை, குறித்த கப்பலுடன் தற்போது தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. 

காணாமல் போன கப்பல் தொடர்பில் அயல் நாடுகளுக்கும் அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் கடற்படைப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.

இந்தக் கப்பல்கள் சர்வதேச கடற்பரப்பில் இருப்பதாக இன்று (18) காலை கடற்படையின் மற்றுமொரு கப்பலுக்கு தகவல் கிடைத்ததாகவும் கப்பலை கரைக்கு கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்

No comments