உக்ரைனில் ரஷ்யா தாக்குதல்: 1,162 நகரங்கள் மற்றும் கிராமங்கள் மின்சாரம் இல்லை!!


உக்ரைனில் குளிர்காலம் தொடங்கும் நிலையில் மின்சார வசதிகள் மீது ரஷ்யா தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியவருகிறது. உக்ரைனில் மின்சார வசதிகளில் மூன்றில் ஒரு பங்கை ரஷ்யா அழித்துவிட்டதாக உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். அத்துடன் மின்சார அபாயத்தையும் அவர் மக்களுக்கு எச்சரித்துள்ளார்.

ரஷ்ய ஆளில்லாத கமிக்கேஸ் டிரோன்கள் மூலம் கிய்வ் மற்றும் நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற மையங்களில் எரிசக்தி வசதிகளை தாக்கி வருகிறது. இது அந்த நாட்டு மக்களை உலுக்கியது. நாட்டின் பல கிராமங்கள் மற்றும் நகரங்கள் இருளில் மூழ்கியது. நீர் விநியோம் சீர்குலைந்தது.

எரிசக்தி வசதிகள் மீதான தாக்குதல்களின் 10 நாட்களுக்குப் பிறகு, ஒன்பது பிராந்தியங்களில் சுமார் 1,162 நகரங்கள் மற்றும் கிராமங்கள் மின்சாரம் இல்லாமல் போய்விட்டது.

அண்மைய தாக்குதல்களில் 70 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் 290 பேர் காயமடைந்தனர் என்று தேசிய அவசர சேவைகள் தெரிவித்தன.

முழு நாடும் மின்சாரம், தண்ணீர் மற்றும் வெப்பமூட்டும் செயலிழப்புகளுக்குத் தயாராக வேண்டியது அவசியம் என்று உக்ரேனிய ஜனாதிபதி அலுவலகத்தின் துணைத் தலைவர் கைரிலோ திமோஷென்கோ உக்ரேனிய தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.

No comments