வவுனியா: காதலிக்க நேரமில்லை-சுட்டுக்கொலை!வவுனியா நெடுங்கேணி பகுதியில் இடியன் துப்பாக்கியால் சுடப்பட்டு 21வயதுடைய யுவதியொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

காதலிக்க மறுத்தமைக்காக துப்பாக்கியால் சுடப்பட்டதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றிரவு நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் யுவதி தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

அண்மையிலும் காதல் விவகாரத்தில் தொடர்புடைய கும்பல் யுவதியினுடைய தந்தை,தாயினை வாளால் வெட்டியதாக தெரியவருகின்றது.

இந்நிலையில் இன்றிரவு உயிரிழந்த யுவதி வீட்டின் பின்புறம் சென்றவேளை சுடப்பட்டுள்ளார். 


No comments