தொடர்ந்தும் திருட்டில் இராணுவம்!இலங்கை இராணுவத்தில் இணைந்துள்ள தமிழ் இளைஞர் யுவதிகள் தொடர்பில்   குற்றச்சாட்டுக்கள் வலுத்துவருகின்றது.

கொள்ளைகள்,அச்சுறுத்தல்களில் அவர்கள் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் வலுத்துள்ளது.

பலாலி  - வள்ளுவர் புரத்தில் வீதியில் சென்ற சிறுமியின் சங்கிலியை அபகரித்துச் சென்ற இராணுவத்தில் பணியாற்றும் ஒருவர் பொதுமக்களினால் மடக்கிப் பிடித்து பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

15 வயதுச் சிறுமி தனியார் கல்வி நிலையத்துக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது,  மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்தவர் சங்கிலியை அபகரித்து விட்டு சிறுமியை கீழே தள்ளிவிட்டுத் தப்பித்துள்ளார்.

காயமடைந்த சிறுமி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், குறித்த நபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்துள்ளனர்.

இலங்கை இராணுவத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றும் கொல்லங்கலட்டியை சேர்ந்தவரே இவ்வாறு மக்களினால் மடக்கிப்பிடிக்கப்பட்டு பலாலி பொலிஸ் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் சங்கிலியும் கைப்பற்றப்பட்டது.

சந்தேக நபரை பொலிஸார் அழைத்துச் சென்ற போது இராணுவத்தினர் தலையீடு செய்ததால் குழப்பநிலை ஏற்பட்டது. எனினும் மக்களின் எதிர்ப்பால் இராணுவத்தினரின் இடையூறு கைவிடப்பட்டது

No comments