இந்திய இராணுவ கொக்குவில் படுகொலை நினைவேந்தல்!அமைதிப்படை என்ற பெயரில் இலங்கைக்கு வந்த இந்திய இராணுவம், நடத்திய இனப்படுகொலையின் 35வருட நினைவேந்தல் இன்றாகும்.

1987ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் 11ஆம் திகதி மற்றும் 12 ஆம் திகதிகளில் கொக்குவில் பிரம்படியில் 40இற்கு மேற்பட்ட அப்பாவி பொது மக்களை துப்பாக்கியால் சுட்டும், வீதியில் போட்டு கவச வாகனம் (டாங்கி) கொண்டு  நசித்தும் படுகொலை செய்து தனது நரபலியினை ஆரம்பித்தது. அமைதிப்படையாக வந்த இந்திய இரானுவத்தின் முதலாவது தமிழ் இனப்படுகொலை சம்பவமாக பிரம்படி படுகொலை பதிவாகியது.

காந்தியடிகளின் 153ஆவது பிறந்த நாளுக்கு, யாழில் உள்ள இந்திய துணை தூதரை அழைத்து வைத்தியசாலை வீதியில் உள்ள காந்தி சிலைக்கு மலர் மாலை அணிவித்து நினைவு கூர்ந்து மகிழ்ந்த தமிழ் காந்தியவாதிகள், இன்று அதே துணை தூதரை அழைத்து வந்து பிரம்படியில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்காக அஞ்சலி செலுத்த வைக்க முடியுமா? ஏன கேள்வி எழுப்பியுள்ளார் உணர்வாளர் ஒருவர்.

அது உங்களால் முடியாதெனின், காந்தியின் போதனைகளை எமக்கு திணிக்கின்ற ஃ போதிக்கின்ற தகுதியும் உங்களுக்கு இல்லை. இது கடந்த ஒக்ரோபர் 2இல் வைத்தியசாலை வீதியில் இடம்பெற்ற காந்தி ஜெயந்தி நிகழ்வில் பங்கேற்க அனைவருக்கும் பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் நினைவாக கொக்குவில், பிரம்படி சந்தியில் அமைக்கப்பட்டிருந்த சிறிய நினைவு தூபியில், சிதைக்கப்பட்டு எஞ்சியுள்ள பகுதியில் இன்று குடும்பங்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.


No comments