பிரியமாலியிடமிருந்து மீட்கப்பட்ட கைத்தொலைபேசி!ராஜபக்ச தரப்புக்களது சகபாடியான ,நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியிடமிருந்து மீட்கப்பட்ட கைத்தொலைபேசி தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

விளக்கமறியலில் உள்ள பெண் கைதி ஒருவரிடம் 50,000 ரூபா தருவதாக கூறி இந்த கையடக்கத் தொலைபேசியை பெற்றுள்ளதாக தற்போதைய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேற்படி கைதிக்கு இந்த கைத்தொலைபேசி எப்படி கிடைத்தது என்பது குறித்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

No comments