அவசர அவசரமாக காணி பிடிப்பு!வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயப்பகுதியிலுள்ள  தமிழ்மக்களது காணிகளை நிரந்தரமாக கையகப்படுத்த நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரச படையினர் வசமுள்ள் காணிகளை சுவீகரிக்கமாறு எழுத்து மூலம் இலங்கை காணி அமைச்சின் மேலதிக செயலாளர் பணிப்புரை வழங்கியுள்ளார்.

காணி அமைச்சின் மேலதிக செயலாளர் ரேணுகாவினால் தெல்லிப்பளை பிரதேச செயலாளருக்கு சிங்கள மொழியில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் பொது மக்களுக்குச் சொந்தமான நிலங்களை முழுமையாகச் சுவீகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வலிகாமம் வடக்குப் பகுதியில் தற்போதும் 2 ஆயிரத்து 467 ஏக்கர் நிலம் இலங்கைப்படையினர் வசம் உள்ளது. அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளில் இராணுவத்துக்கு ஆயிரத்து 614 ஏக்கரையும் அளவீடு செய்யுமாறு தெல்லிப்பளை பிரதேச செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை வலிகாமம் வடக்கில் மீனவர்களின் நிலம் 212 ஏக்கரும், பலாலி வீதிக்கு கிழக்கே உள்ள 612 ஏக்கரும் விடுவிக்கப்படும் என நீண்ட காலமாகத் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது புதிய முயற்சிகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.


No comments