விலை பேச எமது பிள்ளைகள் ஆடு மாடுகளல்ல!

 


ஆடு மாடுகளிற்கு விலை நிர்ணயிப்பது போல காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளிற்கு நட்டஈடு தீர்மானிக்கப்பட முடியாதென வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்ப உறவுகளது சங்கம் அறிவித்துள்ளது.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட சங்க பிரதிநிதிகள் ஜநா வரை சென்று கால அவகாசம் கோரிய ரணில் தற்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான நட்ட ஈட்டை அதிகரிப்பது பற்றி பேசுகின்றார்.

இதன் மூலம் இனப்படுகொலையாளி கோத்தபாய ராஜபக்ஸவை காப்பாற்றவே அவர் செயற்படுவது அம்பலமாகியுள்ளது.

ஏற்கனவே கடந்த ஜந்து வருடங்களாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளிற்கு நீதி கோரி போராடிய நாம் 140 வரையிலான உறவுகளை இழந்துள்ளோம்.

அதே போன்று காணாமல் போனோருக்கான அரசின் ஆணைக்குழுவை நிராகரித்த நாம் இத்தகைய இழப்பீட்டு அரசியலையும் முற்றாக நிராகரிப்பதாகவும் குடும்ப உறவுகள் தெரிவித்துள்ளன.

இதனிiடுய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 4 சந்தேகநபர்களையும் பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டுள்ளது.

பிரமுகர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்தமை, சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் என்பவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் குறித்த  சந்தேகநபர்கள்  கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments