சிறீதர் திரையரங்கிற்கு கடத்தபட்ட மீனவ தலைவர்கள்?

ஊடக சந்திப்பில் இலங்கையின் கடற்றொழில் அமைச்சரின் செயற்பாட்டை விமர்சித்த ஊடகவியலாளார்கள் சிறீதர் திரையரங்கிற்கு அழைத்து

மிரட்டப்பட்டமை அம்பலத்திற்கு வந்துள்ளது.

நேற்றைய தினம் யாழ்.மாவட்ட மற்றும் வடமராட்சி மீனவ அமைப்பு தலைவர்கள் யாழ்.ஊடக அமையத்தில் அமைச்சரது கடலட்டை பண்ணைகளிற்கு கடல் விற்பனை செய்யப்படும் வியாபாரம் பற்றி அம்பலப்படுத்தி ஊடக சந்திப்பினை நடத்திக்கொண்டிருந்தனர்.

ஊடக சந்திப்பு இணைய ஊடகமொன்றில் நேரடியாக ஒளிபரப்பப்பட அமைச்சரிற்கு அவரது அல்லக்கைகள் விடயத்தை போட்டுக்கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து நேரடியாக மீனவ பிரதிநிதிகளிற்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்திய அமைச்சர் போட்டுபிடித்ததுடன் உடனே சிறீதர் தியேட்டரிற்கு வகை தர பணித்துள்ளார்.

இதனையடுத்து அடித்துப்பிடித்து தமது மோட்டார் சைக்கிளையும் கைவிட்ட  நிலையில் மீனவ பிரதிநிதிகள் சிறீதர் திரையரங்கிற்கு வாகனமொன்றில் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

எனினும் சுமார் 4மணி நேரங்களின் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்ட போதும் திரையரங்கில் நடந்தவை பற்றி தகவல்கள் வெளிவந்திருக்கவில்லை.

இதனிடையே மீனவர்கள் தரப்பில் கடற்றொழில் அமைச்சர் பற்றி சொல்லவிருந்தவை

சட்ட விரோதமாக டைனமற் வெடிபொருள் பயன்படுத்தி  மீன் பிடிக்கின்றார்கள்

வெளிச்சத்தைப் பாச்சி (Light Course), தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டு மீன் பிடிக்கின்றார்கள்

கரைவலையை கடலுக்குள் 2,700 மீற்றர் வரையே செய்ய முடியுமென கரைவலைச் சட்டம் கூறுகையில் 5,000 – 6,000 மீற்றர் வரை முல்லைத்தீவு கடற்கரையில் கரைவலையை பயன்படுத்துகின்றார்கள் 

உழவு இயந்திரத்தில் வீஞ்ச் (Winch) என்கிற  இயந்திரத்தைப் பொருத்தி தொழில் செய்கின்றார்கள் 

இறால் இனப்பெருக்கம் அதிகம் உள்ள களப்பு  பகுதிகளில் இயந்திரப் படகுகள் பயன்படுத்துகின்றார்கள் 

பாதுக்கப்பட்ட கண்டல் தாவரங்களை கூட வெட்டி கொண்டு போகின்றார்கள்

முகத்தூவாராம் நல்ல  தண்ணித்தொடுவாய் முதல் பேய்ப்பாறைபிட்டி வரையான  74 KM  முல்லைத்தீவு  கடற் பரப்பை வாழ்வாதாரமாக கொண்ட முல்லைத்தீவு மீனவர்கள் மேற்படி சட்டவிரோத தொழில்கள் காரணமாக அல்லாடி வருகின்றார்கள் 

இந்த சட்டவிரோத தொழில்கள் காரணமாக கடலில் வாழ்கின்ற சிறிய மீன்கள்  பாதிப்புக்கு  உள்ளாகின்றன.

ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன.

கடலின் அடியில் உள்ள பவளப்பாறைகள் முற்றாக அழிந்துபோகின்றன.

மீன்கள் இனப்பெருக்கம் பாதிக்கப்படுகின்றது.

அதே போல அழிக்கப்படும்  கண்டல் தாவர குற்றிகளில் வலை சிக்கி பல வலைகள் சேதமாகின்றது.

ஆனால் பொலிஸ், கடற்படை அதிகாரிகள்   லஞ்சம் வாங்கிக் கொண்டு  இரவில் பார்ட்டி போட சட்டவிரோத தொழில்  நடந்து கொண்டு இருக்கின்றது 

இது பற்றி நடவடிக்கை எடுக்க  வேண்டிய கடற்தொழில் நீரியல் வள தன திணைக்களம் சட்டவிரோத தொழில் செய்பவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கின்றது 

இது போதாதென்று யாழ்ப்பாணத்தில்  அரியாலை, அல்லைப்பிட்டி புங்குடுதீவு போன்ற  இடங்களிலும் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் கிராஞ்சி, வலைப்பாடு, வேரவில், பள்ளிக்குடா, நாச்சிக்குடா, இரணதீவு போன்ற இடங்களிலும்  கடலட்டை பண்ணைகள் அமைக்கப்பட்டு வருகின்றன 

இவ்வாறு வட மாகாணத்தில் மட்டும்  750க்கு மேற்பட்ட கடலட்டை பண்ணைகள் வழங்கப்பட்டு இருக்கின்றது.

கடல் அட்டை பண்ணை கடல் வளர்ப்பதற்கு ஏற்ற இடங்களில் செய்ய யாரும் எதிர்ப்பு சொல்ல முடியாது 

ஆனால் பாரம்பரியமான முறையில் கடை தொழில் செய்பவர்களுக்கு இடையூறாக கடல் போக்குவரத்துக்கு இடையூறாக கடல் பண்ணையை  அமைத்து வருகின்றார்கள் 

குறிப்பாக கடல் தொடுவாய்களை மறைத்து கடலட்டை பண்ணைகள் அமைத்து வருகின்றார்கள்  

அதாவது கடலட்டை பண்ணை அமைக்கும் பொது இயற்கையாகவே மேய்ச்சலுக்காகவும், இருப்புக்காகவும், விருத்திக்காகவும் மீன்கள் வந்து நடமாடும் பகுதிகள் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும் என்கிற அடிப்படை விதியை கூட மீறுகின்றார்கள் 

அதே போன்று உள்ளூர்த் பாரம்பரிய தொழிலாளர்களுக்கு இடையூறு இல்லாத இடங்களாகத் தேர்வு செய்ய வேண்டும் என்கிற மீனவர்களின் கோரிக்கையையும் உதாசீனம் செய்கின்றார்கள் 

இதன் காரணமாக  மீன்வரத்து குறைந்து கடற்றொழிலாளர்கள் பாதிப்பை எதிர்கொள்ளுகின்றார்கள் 

மேலும் கடலுடன் தொடர்பு பட்டவர்களுக்கு கடல் அட்டை பண்ணை அமைப்பதற்கு அனுமதிகள் வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையையும் தவிர்க்கின்றார்கள் 

சீனா வடபகுதி கடற்பரப்புக்களில் குறிப்பாக தீவகப்பகுதிகளில் சுமார் 300 ஏக்கரில் கடல் அட்டை பண்ணை அமைக்கப் போவதாக சொல்லப்படுகின்றது 

யாழ்ப்பாணத்தில்  100க்கும் மேற்பட்ட மீனவ சங்கங்கள் இருக்கின்ற நிலையில் எந்த ஒரு சங்கத்திலும் அங்கத்தவராக இல்லாதவர்களுக்கு கடல் அட்டைப் பண்ணை அமைக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது 

அதே போல  ஆட்கள் நடமாட்டமற்ற பல தீவுகள் கடலட்டை பண்ணைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை பற்றி மீனவ சங்கங்கள் அம்பலபடுத்தி இருக்கின்றன 

இது தவிர, குறைந்த பட்சம் இந்த பண்ணைகள் மூலம் கடற்றொழிலாளர்கள் பெற்று கொண்ட வருமானம் 

அவர்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கம் என்பன பற்றி கூட எந்த ஆய்வுகளும் இல்லை  

சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் பாதிப்பு குறித்து கூட யாரும் சிந்திப்பதில்லை 

தென்னிந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு , இந்திய மீனவர்களின் தொல்லை,  எங்கள் மீனவர்கள்ஒழுக்கயீனம் என பல பிரச்சனைகளுடன் அரசியலும் சேர்ந்து கொள்ள மீன் வளம் சிதைந்து வருகின்றது .

நாங்கள் வேற மாதிரி யோசிக்க வேண்டியவை நிறைய இருக்கின்றன. எங்களுடைய கடல்வளங்களை மீன்பிடிக்கு வினைத்திறனுடன் எப்போது பயன்படுத்தப் போகின்றோம் என்றே தெரியவில்லை

No comments