அகதி அந்தஸ்த்து கோரி தப்பித்த இலங்கை கடற்படையினர்!



இலங்கையின் கடற்படையினர் ஆறு பேர் பயணித்த படகு ஒன்றை கடந்த 17 நாள்களாகக் காணவில்லை என்றும் கடற்படையினர் நீண்ட தேடுதலில் ஈடுபட்டுள்ளனர் என்றும் விடயமறிந்த வட்டாரங்களிலிருந்து தெரியவந்தது. இந்த ஆறு பேரும் இலங்கைக் கடற்பிராந்திய எல்லையை விட்டு வெளியேறி வெளிநாடு எதற்கும் கம்பி நீட்டியிருக்கலாம் என சில வட்டாரங்களில் பேச்சடிபட்டன.

இலங்கைக் கடற்படையினருக்குச் சொந்தமான ட்ரோலர் ரக  464 இலக்கமுடைய படகில் பயணித்த கடற்படையினரே இவ்வாறு காணாமல்போயுள்ளனர். 

காணாமல்போன படையினர் தங்காலை துறைமுகத்தில் இருந்து செப்ரெம்பர் மாதம் 16 ஆம் திகதி  12.30 மணிக்கு புறப்பட்டுள்ளனர். 

இவ்வாறு புறப்பட்ட ஆறு பேரில் ஒருவர் இயந்திரப் பொறியியலாளர் மற்றொருவர் அதிகாரி எனவும் கண்டுகொள்ளப்பட்டுள்ளது. 

இதேநேரம் காணாமல்போன படகு சர்வதேச எல்லை நோக்கிப் பயணித்தமை வரை கடற்படையினர் தற்போது கண்டறிந்தமையினால் படகு பழுதின் காரணமாக திசைமாறியதா அல்லது வேறு நாட்டிற்கு தப்பிச் சென்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லும் நிலையில் கடற்படையினரும் தப்பிச் சென்றனரா என்ற சநதேகமும் நிலவுகின்றது. 

இருந்தபோதும் காணாமல்போன படகை கடற்படையினரின் பல படகுகள் தேடிவருகின்றன என்று கூறப்பட்டது.

No comments