மின்னஞ்சல் அல்ல:சாம் கடிதமே முக்கியம்!



முன்னைய காலத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி டெல்லிக்கு கடிதம் எழுதுவது பிரசித்தியானது.

மின்னஞ்சல்,முகநூல்,வட்ஸ்அப் என எதுவந்தாலும் கடிதம் எழுதுவதை கருணாநிதி போல கைவிட தயாரில்லாதவர் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்;.இடையிடையே கடிதம் எழுதி தான் உயிரோடிருப்பதை அவர் காண்பிக்க தவறுவதில்லை.

இந்நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இனத்துவ நிலத் தொடர்ச்சியை துண்டிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். இது தொடர்பில் இரா.சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

வரலாற்று சிறப்புமிக்க திருகோணமலை திருகோணேஸ்வரர் ஆலய சூழலில் இடம்பெறுகின்ற அத்துமீறிய செயற்பாடுகள் மற்றும் திருகோணமலை மாவட்ட எல்லைகளை மாற்றுவதற்கான முயற்சிகளை இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல தலைமுறைகளாகவும் நூற்றாண்டுகளாகவும் தமிழர்களின் வரலாற்று ரீதியான வாழ்விடங்களாகவிருக்கும் நிலப்பரப்பை பாரதூரமானதொரு முறையில் மாற்றியமைக்கும் வகையில் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக பிரிவுகளின் எல்லைகளை மாற்றுவதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தின் வடகோடியிலுள்ள ஒரு பெரும் நிலப்பரப்பு திருகோணமலை மாவட்டத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக வட மத்திய மாகாணத்திலுள்ள அனுராதபுரம் மாவட்டத்திலிருந்து ஒரு பெரும் நிலப்பரப்பு பதிலீடு செய்யப்படவுள்ளதென தமக்கு அறியக்கிடைத்துள்ளதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.


No comments