மொட்டு இதழ்கள் பிரிகின்றன!


இலங்கை மின்சார சபை, இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் மற்றும் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விஜித ஹேரத், டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர ஜனதா சபையில் இணைந்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்த பொதுஜன பொறியியல் பெரமுனவின் தலைவராகவும் இருந்த அவர், அக்கட்சியின் சகல பொறுப்புக்களையும் கைவிட்டு டலஸ் அணியில் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி நாவலவில் உள்ள சுதந்திர மக்கள் பேரவையின் அலுவலகத்தில் டலஸ் அழகப்பெரும, ஜி. எல். பீரிஸ், சரித ஹேரத் உள்ளிட்ட எம்.பி.க்கள் குழுவைச் சந்தித்து விஜித ஹேரத் தனது ஆதரவை வெளியிட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

No comments