இது செல்வம் கூட்டாளி சுரேந்திரன் சுட்ட கதை!


காலத்திற்கு காலம் தமிழ் மக்கள் தலைகளில் தேசியம் பேசி மிளகாய் அரைக்க சிலர் வந்தவண்ணமேயிருக்கின்றனர்.

இதுவரை காலமும் கூட்டமைப்பினில் எம்.ஏ.சுமந்திரன் சட்டம் பேசி ஒதுக்கப்பட்ட நிலையில் அவருக்கு போட்டியாக டெலோ சார்பில் களமிறங்கியவர் சுரேந்திரன் குருசாமி.

கொழும்பில் மொழியால் தடைப்பட்டிருந்த செல்வம் அடைக்கலநாதனின் அரசியல் பாதையினை திறந்து வைத்து கல்லாகட்டிய சுரேந்திரன் குருசாமி முன்னதாக செல்வத்தின் போட்டி அரசியல் செயற்பாட்டளரான சிறிரெலோ உதயராசா நண்பராக இருந்திருந்தார்.

வவுனியாவில் ஆட்கடத்தல்,கப்பம் என நன்கறியப்பட்ட சிறிரெலோ உதயராசாவிலிருந்து விலகி செல்வத்துடன் நல்லாட்சியின் கூட்டு சேர்ந்த சுரேந்திரன் அண்மையில் தனித்து தமிழ் மக்களை காப்பாற்ற ஜெனீவா சென்று மூக்குடைபட்டிருந்தார்.

இந்நிலையில் கொழும்பில் அப்பாவி புலம்பெயர் தமிழ் மக்களது வீடொன்றை சிறிரெலோ உதயராசாவுடன் சுருட்டிய சம்பவம் அம்பலமாகியுள்ளது.

சுருட்டியவ வீடு தொடர்பில் உதயராசா கைதாகிய போதும் தற்போது ரணில் பாதுகாப்பில் தப்பித்தோட தொடங்கிய சுரேந்திரன் கதையை கீழே காணலாம். 

No comments