இந்தியாவே சதி:சைக்கிளிற்கு இந்திய விளம்பரம்!யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே சந்திக்கொரு காந்தி சிலையினை நிறுவிவரும் இந்திய துணைதூதரகம் மறுபுறம் நல்லூரில் தியாகி திலீபன் நினைவேந்தல் குழப்பங்களின் பின்னணியில் இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றஞ்சுமத்தியுள்ளது.

இந்நிலையில் மகாத்மா காந்தியின் 153-வது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் பகுதியாக, யாழ் இந்திய துணைத் தூதரகம் இன்று வெள்ளிக்கிழமை காந்திய கொள்கைகளான நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் உணர்வு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த சைக்கிள் பேரணியை ஏற்பாடு செய்ததாக அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் நகரத்தில் உள்ள காந்தி சிலையிலிருந்து யாழ்ப்பாணக் கல்லூரி வட்டுக்கோட்டை வரையிலான பதினொரு கிலோமீட்டர் சைக்கிள் பேரணி மதத் தலைவர்களால் கொடியசைக்கப்பட்டுத் தொடங்கி வைக்கப்பட்டது. வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, காந்தியடிகள் 1927-ஆம் ஆண்டு விஜயம் செய்தபோது பெருமை பெற்றிருந்ததாக தூதரகம் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.  


No comments