வடக்கிற்கு அள்ளிவீசப்படும் சீனா உதவி!சீனாவின் செஞ்சிலுவைச் சங்கம், இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு மேலும் 150,ஆயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான உணவுப் பொதிகளை வழங்க முன்வந்துள்ளது.

தனது உதவிகளை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக வழங்கவுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே வடக்கு மீனவர்களை முன்னிறுத்தி கொரோனா பெருந்தொற்றின் போது சீன அரசு உணவுப்பொதிகளை வழங்கி நற்பெயரை பெற்றிருந்தது.


No comments