இல்லை:இல்லை!! சாம் பதவி இறங்கமாட்டார்!தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாகவும், அதிகாரத்தை மாற்றுவதற்கு வசதியாக குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.

எவ்வாறாயினும், அந்தச் செய்தி போலியானது எனவும், கட்சித் தலைமையில் மாற்றம் ஏற்படாது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

No comments