கோத்தபாய சுருட்டிக்கொண்ட சூடாமாணிக்கம்!ருவன்வெலிசாயவில் கோத்தபாய சுருட்டிக்கொண்டதாக சொல்லப்படும் முடியிலிருந்த சூடாமாணிக்கம் பற்றிய விவகாரம் சூடுபிடித்துள்ளது

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரம பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் ருவன்வெலிசாயவில் சூடாமாணிக்ய தொடர்பில் அவர் நடத்திய நேர்காணல் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்காகவே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

No comments