அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்கமாட்டோம் - எச்சரிக்கையை உதாசீனப்படுத்த வேண்டாம் - புடின்


ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவித்தால் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்கமாட்டோம் என அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.

தலைநகர் மாஸ்கோவில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இராணுவத்தை அணிதிரட்டலை அறிவித்தார். நாட்டு மக்களுக்கு உரையாற்றிய புடின், உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் எல்லை மீறி செயல்படுவதாகவும், ரஷ்யாவை பலவீனப்படுத்தி அழிக்க நினைப்பதாகவும் குற்றம்சாட்டினார். பதிலடி கொடுக்க எங்களிடம் ஏராளமான ஆயுதங்கள் உள்ளது.

தங்கள் சொந்த எதிர்காலத்தை தீர்மானிக்க வீரர்களுக்கு ஆதரவு வழங்கப்படும். ரஷியாவிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் எந்த எல்லைக்கும் செல்ல நாங்கள் தயார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணு ஆயுத தாக்குதல் குறித்து தனது எச்சரிக்கையை உதாசீனப்படுத்த வேண்டாம் எனத் தெரிவித்த புடின், ரஷ்யர்கள் அதிகம் வசிக்கும் டான்பாஸ் பிராந்தியத்தை உக்ரைன் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்பதே போரின் குறிக்கோள் என்றார்.

No comments