ஐரோப்பாவில் மின்சார விலைகள் வரலாறு காணாத அளவுக்கு உயர்வு


ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்புக்குப் பின்னர் உலகம் முழுவதும் பொருளாதார வலியை ஏற்படுத்துவதால், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மின்சார விலைகள் வெள்ளிக்கிழமை முதல் உயர்ந்து சாதனை படைத்துள்ளது.

ஜேர்மன் மின்சாரத்திற்கான வருடத்திற்கு முந்தைய ஒப்பந்தம் ஒரு மெகாவாட் மணிநேரத்திற்கு 995 யூரோக்களை ($995) எட்டியது. அதே நேரத்தில் பிரெஞ்சிலும்  மின்சாரம் 1,100 யூரோக்களைக் கடந்தது. இவ்விலை கடந்த ஆண்டை விட இரு நாடுகளிலும் பத்து மடங்கு அதிகமாகும்.

பிரிட்டனில், மின்சாரம் மற்றும் எரிவாயு விலை வரம்பை அக்டோபர் 1 முதல் ஆண்டுக்கு சராசரியாக £3,549 ($4,197) வரை கிட்டத்தட்ட இருமடங்கு அதிகரிக்கும் என எரிசக்தி கட்டுப்பாட்டாளர் ஒப்கெம் Ofgem கூறியுள்ளது.

கோவிட் கட்டுப்பாடுகள் மற்றும் ரஷ்யா மீதா பொருளாதாரத் தடைகளால் உலகளாவிய மொத்த எரிவாயு விலைகள் அதிகரித்துள்ளதாக ஒவ்கெம் குற்றம் சாட்டியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சுழலும் தலைமைப் பதவியை வகிக்கும் செக் குடியரசு ஐரோப்பிய ஒன்றிய ஆற்றல் நெருக்கடி உச்சிமாநாட்டை  கூடிய விரைவில் கூடிய தேதியை அறிவிக்கவுள்ளதாகஅறிவித்தது.

மொஸ்கோ மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடையே போர் தொடர்பாக பதட்டங்களுக்கு மத்தியில் குளிர்காலத்தில் கடுமையான மின்சார வெட்டுக்கள் அதிகரிக்கும் என்ற அச்சத்துடன், கண்டத்திற்கு இயற்கை எரிவாயு விநியோகத்தை ரஷ்யா குறைத்துள்ளதால் ஐரோப்பாவில் எரிசக்தி விலைகள் உயர்ந்துள்ளன.

ஐரோப்பிய மின்சாரத்தில் ஐந்தில் ஒரு பங்கு எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களால் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே விநியோகத்தில் ஏற்படும் வீழ்ச்சி தவிர்க்க முடியாமல் அதிக விலைக்கு வழிவகுக்கும்.

அணு உலைகள் அரிப்பு பிரச்சினைகளால் மூடப்பட்டதால், பிரான்ஸ் மின்சார விலை உயர்வுக்கு பங்களித்தது. எரிசக்தி நிறுவனமான ஈடிவ் EDF ஆல் இயக்கப்படும் 56 உலைகளில் 24 மட்டுமே வியாழக்கிழமை இயங்கு நிலையில் இருந்தன. பாரம்பரியமாக மின்சாரத்தை ஏற்றுமதி செய்யும் பிரான்ஸ் இப்போது இறக்குமதியாளராக உள்ளது.

ஐரோப்பாவில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் குளிர்காலம் கடினமான காலமாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த குளிர்காலத்தில் பொது நிர்வாக அலுவலகங்களின் வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸாக (66 டிகிரி பாரன்ஹீட்) குறைக்கப்படும் என்று ஜேர்மனி புதன்கிழமை அறிவித்தது. அதே நேரத்தில் சூடான நீர் நிறுத்தப்படும் அறிவித்துள்ளது.

செப்டம்பரில் இருந்து தனியார் நீச்சல் குளங்களை சூடாக்குவதற்கான தடையும் நடைமுறைக்கு வருகிறது.

பின்லாந்து அதன் குடிமக்கள் தங்கள் தெர்மோஸ்டாட்களைக் குறைக்கவும், குறைந்த நேரம் குளிக்கவும் மற்றும் சானாக்களில் குறைந்த நேரத்தை செலவிடவும் ஊக்குவிக்கிறது. து ஒரு தேசிய பாரம்பரியமாகும்.

எரிசக்தி விலை உயர்வால் தொழிற்சாலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

அம்மோனியாவை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் உரம் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை இந்த வாரம் போலந்து, இத்தாலி, ஹங்கேரி மற்றும் நோர்வே தங்கள் செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்தன.

நான்காவது காலாண்டு மற்றும் 2023 முதல் மூன்று மாதங்களில் பொருளாதாரம் சுருங்குவதால், யூரோ மண்டலத்தில் "மந்தநிலை தவிர்க்க முடியாதது" என்று எச்எஸ்பிசி HSBC வங்கி ஒரு குறிப்பில் எச்சரித்தது.

No comments