ரோம் நகரில் சுரங்க இடிபாட்டில் சிக்குண்டார் வங்கிக் கொள்ளைக்காரன்


இத்தாலி  ரோம் நகரில் வங்கிக்கொள்ளைக்காக சுரங்கம் கிண்டிய நபர் சுரங்கப் பாதையின் மேற்பகுதி இடித்து விழுந்தததில் மண்ணுக்குள் சிக்குண்ட நிலையில் அவரை தீயணபை்பு வீரர்கள் மீட்டுள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை நிலத்தின் கீழ் 6 மீற்றர் ஆழத்தில் சிக்குண்ட நபரை 8 மணி நேரம் போராடி சிக்குண்டவர் மீட்கப்பட்டார்.

சிக்குண்ட நபர் ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திருட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சிக்குண்டவரின் கூட்டாளிகள் சந்தேகத்தின் பெயரில் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளளனர். அத்துடன் அதிகாரியை எதிர்த்ததற்கா மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் மேலும் இருவர் சேதம் ஏற்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டனர்.

விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. இது வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

ஆகஸ்ட் 15 அன்று பொது விடுமுறையான ஃபெராகோஸ்டோவிற்கு இத்தாலிய கடைகள் மூடப்படும் போது, ​​அருகிலுள்ள வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

அவர்கள் தோண்டிக்கொண்டிருந்த சுரங்கப்பாதை வத்திக்கான் நகருக்க அருகில் உள்ள ஒரு பரபரப்பான சாலையில் ஒரு பூட்டப்பட்ட கடையின் அடியில் கண்டுபிடிக்கப்பட்டது.

கடை வாடகைக்கு விடப்பட்டதால் யாரும் உண்மையில் கவனம் செலுத்தவில்லை. கடை புதுப்பிக்கப்படுவதாக அனைவரும் நினைத்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

No comments