கூட்டரசு பேசுகையிலேயே கிளியில் சிங்கள மயமாக்கல்!நேற்றைய தினம் புதிய ஜனாதிபதியுடன் கூட்டரசு பற்றி பேசிய கூட்டமைப்பின் எம்பி சிறீதரன் கிளிநொச்சியில் உள்ள அனைத்து முன் பள்ளிகளினதும் பெயர்களை மாற்றி  வீரமுத்து என்று பெயர்ப்பலகை இடுவதற்கான பணிகள் நேற்றைய தினம்  ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சமத்தியுள்ளார்.

இந்நடவடிக்கை கல்வித்துறை மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள அவர் குறித்த வேலை திட்டத்தை சிவில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் அரசின் முதலாவது தமிழின ஆக்கிரமிப்பு ; கண்ணகி நகர் பாற்கடற் பூங்கா முன்பள்ளி வீரமுத்துகள் முன்பள்ளி என சிங்கள மொழியை முதன்மை மொழியாக கொண்டு தமிழர் பிரதேசங்களில் பெயர் பலகை மாற்றம் செய்யப்பட்டுள்ளது

கண்ணகி நகர் பாற்கடற் பூங்கா  முன்பள்ளி  பெயர் நேற்றைய தினம் வீரமுத்துக்கள் முன்பள்ளி என மும்மொழிகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் சிங்கள மொழி தமிழர் பிரதேசங்களில் முதன்மையாக முன்பள்ளி பெயர் பலகையில் எழுதப்பட்டுள்ளதுடன் சிவில் பாதுகாப்பு திணைக்களம் விசுவமடு எனக் குறிப்பிடப்பட்டுள்ளமை  வன்மையாக கண்டிக்கத்தக்கது  

கிளிநொச்சியில் உள்ள அனைத்து முன் பள்ளிகளினதும் பெயர் வீரமுத்து என்று பெயர்ப்பலகை இடுவதற்கான பணிகள் நேற்றைய தினம்  ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை கல்வித்துறை மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கடும் விஷனத்தை ஏற்படுத்தியுள்ளது குறித்த வேலை திட்டத்தை சிவில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனதாகவும் அவர் கூறியுள்ளார்.


No comments