ஜோசப்பிற்கு ஒன்று! சமனிற்கு இன்னொன்று!!இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர்  தோழர்ஜோசப் ஸ்டாலின்  சற்று உடல்நிலை சரியில்லாத நிலையில் கொழும்பு கோட்டை பொலிஸாரால்  நீதிமன்ற உத்தரவு அல்லது பிடியாணை ஏதுமின்றி இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைமையகமான " "குருமெதுர"வில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் . 

கோல்பேஸ் மக்கள் போராட்டம் ஆரம்பமாகி 50 நாட்கள் நிறைவு தினத்தன்று கலந்து கொண்ட கூட்டத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் ஜனாதிபதியின் தற்போதைய தொழிற்சங்க ஆலோசகர் சமன் ரத்னப்பிரியவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தார் என்பதும் கவனத்திற் கொள்ளத்தக்கது. 

இதையொட்டி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டதாக  காவல்துறையினரால் வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டது . இலங்கையில் அதிக ஆளணியினரை கொண்டுள்ள அதிபர் ஆசிரியர்களைக் கொண்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கப் பொதுச்செயலாளரின் கைதானது ஜனநாயகத்தின் குரல் வளையை நசிக்கும் அரச பயங்கரவாதமாகும். தமது ஆட்சி மோகத்துக்கான பாசிச ஆட்சியாளர்களின் அராஜகம் மிக வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது என  ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

No comments