முன்னணியின் ஒதுக்கீட்டை கோட்டைவிட்டனரா?தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்களிற்கென ஒதுக்கி வழங்கப்பட்ட கணணிகளை சாவகச்சேரி பிரதேச செயலக அதிகாரிகள் பொறுப்பற்று விநியோகிக்காதிருப்பதாக  குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர்களது பன்முக வரவு செலவுத்திட்டத்தினில் ஒதுக்கப்பட்ட நிதியில் கொள்வனவு செய்த கணணிகளையே அதிகாரிகள் சிலர் அக்கறையற்று கொள்வனவு செய்து வழங்காதிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவராலும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகாத போதும் ஊடகவியலாளர்களிற்கு சேர்ப்பிக்காமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

ஏற்கனவே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனது ஆதரவாளர்கள் பயன்பாட்டிற்கென அப்பிள் கைத்தொலைபேசிகளை கொள்வனவு செய்ய ஒதுக்கிய நிதியை உரியவகையில் செலவு செய்யவில்லையென கரவெட்டி பிரதேச செயலகம் மீது குற்றச்சாட்டுக்களை எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments