பதுக்கல் அல்லவாம்:புதுக்குடியிருப்பு அதிசயம்!பிரதேச செயலர் எரிபொருள் பதுக்கினார் என பரபரப்பு காண்பித்த புதுக்குடியிருப்பு காவல்துறை புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் அலுவலகத்திலிருந்து பெற்ற பொருள்களை மீளளித்துள்ளது.

பிரதேச செயலர் அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட அனைத்துப் பொருட்களும் காவல்      துறையினரால் பிரதேச செயலாளரிடம்                      மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலரிடமிருந்து பதுக்கல் என்ற பிரச்சாரத்துடன் கைப்பற்றப்பட்ட பொருட்கள் அதனை ஊடகங்களில் பிரச்சாரப்படுத்தியமை தொடர்பில் கடுமையான எதிர்வினை அரச பணியாளர்கள் தரப்பில் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே பறித்தவற்றை சத்தமின்றி காவல்துறை கையளித்துள்ளது.

No comments