முன்னணியும் கண்டனம்!காலி முகத்திடலில் ஜனநாயக வழியில் போராடிய போராட்டக்குழுவினர் மீதும் அங்கு பிரசன்னமாகியிருந்த ஊடகவியலாளர்கள் மீதும் அரச இயந்திரத்தால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை மிக வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

காலிமுகத்திடல் போராட்டத்தில் தமிழ் மக்களின் அபிலாசைகள் பிரதிபலிக்கப்படாவிட்டாலும் சகோதர சிங்கள தேசத்தின் நலன்களை உறுதிப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படுகின்ற போராட்டம் என்ற ரீதியில அங்கே மேற்கொள்ளப்படுகின்ற சர்வாதிகாரத்தையும் அராஜகத்தையும் தமிழ்த் தேசத்தின் விடுதலைக்காகச் செயற்படுகின்ற நாங்கள் கண்மூடி மௌனிகளாகப் பேசா மடந்தைகளாகப் பார்த்துக்கொண்டிருப்பது தமிழினத்தின் அரசியற் பண்பாட்டிற்கு முரணானது என கட்சியின் ஊடகப்பேச்சாளர்  தெரிவித்துள்ளார்.

அரச இயந்திரத்தினதும் இராணுவத்தினதும் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ஊடக உறவுகளுக்கும் ஆதரவை வெளிப்படுத்தி நிற்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

No comments