சர்வதேச அவப்பெயர்:ரணிலே பொறுப்பு!சர்வதேச அவப்பெயர் மற்றும் நாட்டின் நெருக்கடியை தீர்க்க கிடைக்க வேண்டிய சர்வதேச ஒத்துழைப்புகள் கிடைக்காது போனால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே அதற்கு நேரடியாக பொறுப்புக்கூற வேண்டும் என கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அத்துடன் இராணுவ அடக்குமுறையை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதியை வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

இதனிடையே கொழும்பு காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு கிழக்கு மக்கள் ஒன்றியம் உள்ளிட்ட வடகிழக்கை சேர்ந்த பொது அமைப்புக்கள் பலவும் கண்டனம் வெளியிட்டுள்ளன.

கிழக்கு மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான ஜயந்த விஜேசகர தமது உரிமைகளை கோரி காலி முகத்திடலில் அமைதியான முறையில் போராட்டங்களை நடத்தி வந்த போராட்டக்காரர்கள் மீது தொடுக்கப்பட்ட வன்முறை சம்பவங்களை முற்றிலும் கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.


No comments