ரூபவாஹினியில் தேனீர் குடித்ததற்கு கைது!
தமிழ் இளைஞர் யுவதிகளை கைது செய்த பின்னர் காரணம் தேடும் இலங்கை காவல்துறை தற்போது சிங்கள இளைஞர் யுவதிகளது கைதுகளிற்கு காரணம் தேடுகின்றது.

ஜுலை 13ஆம் திகதி, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் பலவந்தமாக நுழைந்து, ஒளிபரப்புக்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தனிஸ் அலி என்பவர், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

டுபாய் செல்ல முயற்சித்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானத்தினுள் வைத்து குற்றப் புலனாய்வு பிரிவினரால் அவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய குறித்த நபரை விசாரணைக்கு உட்படுத்த குற்றப் புலனாய்வு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

கொழும்பு கோட்டை மற்றும் காலிமுகத்திடல் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் அடிப்படையில், கடந்த 13ஆம் திகதி சில தரப்பினர் இலங்கை ரூபவாஹினி கூடடுத்தாபனத்திற்குள் பலவந்தமாக நுழைந்து ஒளிபரப்புக்கு இடையூறு ஏற்படுத்தியிருந்தனர். இந்த விடயம் தொடர்பில், குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

ஏற்கனவே ரூபவாகினிக்கு வருகை தந்தவர்களிற்கு தேனீர் விருந்து வழங்கியதாக பணியார்கள் விசாரணகளை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 

No comments