ஜேவிபியுடன் இந்தியாவும் சமரசம்!தென்னிலங்கையில் அரசியல் ஆளுமையுள்ள தரப்பாக மீண்டும் ஜேவிபி வளர்ந்துவருகின்ற நிலையில் அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவும் நட்புறவை பேண முற்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையிலான விஷேட சந்திப்பொன்று நேற்று (26 ஆம் திகதி) பிற்பகல் இந்திய உயர்ஸ்தானிகராலய அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாகவே இக்கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

  இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் கலந்துகொண்டதுடன், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முதன்மைச் செயலாளர் எல்டோஸ் மெத்யூவும் கலந்துகொண்டுள்ளார்.

.தீவிர இந்திய எதிர்ப்பு அடையாத்தை முன்னிறுத்திய ஜேவிபியினருடான தூதரின் சந்திப்பு கவனத்தை ஈர்த்துள்ளது

No comments