கடற்படைக் கப்பலில் தப்பிச் சென்றவர்கள் யார்?


கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள இலங்கை கடற்படையின் இரண்டு கடற்படைக் கப்பல்களில் சிலர் ஏறுவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

தரித்து நின்ற சிதுரல மற்றும் கஜபாஹு ஆகிய இரண்டு கப்பல்களும் சற்று முன்னர் கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்தி குறித்து இலங்கை கடற்படையின் பேச்சாளரை தொடர்பு கொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.

கப்பல்களில் ராஜபக்ச குடும்பங்கள் தப்பி ஓடியதாகவும், கோட்டபாய விமான மூலம் தப்பிச் சென்றதாகவும் செய்திகள் பரவி வருகின்றன. இதனை சுயாதீனமாக உறுதி செய்ய முடிவில்லை.No comments