சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்கு:போலாந்து நாட்டை சேர்ந்தவர் கைது !இலங்கையில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்கு சென்ற போலாந்து நாட்டை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவர் இலங்கையில் குற்றச்செயல் ஒன்றுடன் தொடர்புடைய குற்றத்தில் கைதாகி சிறைத்தண்டனை அனுபவித்து , தண்டனைக்காலம் முடிவடைந்து விடுதலை செய்யப்பட்டவர் என தெரியவந்துள்ளது.

முன்னதாக சந்தேகத்திற்கு இடமான வகையில் மிதவை படகில் தமிழகத்தினுள் புகுந்தவர்கள் தொடர்பில் சந்தேகம் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments