காணாமல் போயிருந்தது கிடைத்தது!

இலங்கை நாடாளுமன்றிற்கு அருகில் பொல்துவ சந்தியில், ஜூலை 13 ஆம் திகதியன்று நடைபெற்ற போராட்டத்தின் போது, படையினரிடம் இருந்து அபகரிக்கப்பட்ட ரி-56 துப்பாக்கி மற்றும் வெற்று ரவைக்கூடு ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

தியவன்னாவ பாலத்துக்கு கீழிருந்து, இலங்கை கடற்படை சுழியோடிகளால் அவை மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜேவிபியே அதனை எடுத்துச்சென்றிருந்ததாக தெரிவித்து ரணில் அனுரகுமார திசநாயக்கவிடம் அதனை கோரியிருந்தார்.

இந்நிலையில் தற்போது காணாமல் போயிருந்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.


No comments